புதன், 13 மார்ச், 2013

பேராசையின் விளைவு


ஒரு காட்டில் இருந்த குரங்கு ஒன்று பசிஎடுத்தால் மட்டும் மரத்திலுள்ள பழங்களை பறித்து தின்று தன்னுடைய பசியாற்றி கொண்டபின் நன்கு தூங்கி தன்னுடைய பொழுதை கழித்துவந்தது

இந்நிலையில் அந்த குரங்கிற்கு இதைவிட நல்ல பொருளை உண்ண வேண்டும் என்ற போராசை ஏற்பட்டது அதனால் மனிதர்கள் வாழும் குடியிருப்பு பகுதிக்கு வந்தது அங்கு ஒரு குடியானவன் தன்வீட்டு முற்றத்தில் தன்னுடைய தோட்டத்தின் மரத்தில் விளைந்த (காய்த்த) மாம்பழங்களை அறுவடைசெய்து விற்பனை செய்வதற்காக குவியலாக கொட்டி வைத்திருந்தார் அதை பார்த்த அக்குரங்கானது வாயில் ஒன்றும் இரண்டு கை கொள்ளும் அளவிற்கு மற்றொன்றும் என இரண்டை மட்டும் எடுத்து கொண்டு காட்டிற்கு திரும்பியது

அங்கு தன்னுடைய கையிலிருந்ததை கீழேவைத்தால் வேறு குரங்கு ஏதாவது அதனை எடுத்து தின்றவிடுமோ என்ற பயத்தினால் கையிலியே வைத்து கொண்டு வாயிலிருந்ததை பசிஎடுத்தும் தின்ன முடியாமல் தவித்தது. இரண்டு கைகளாலும் பழத்தை பிடித்து கொண்டிருந்த்தால் மரத்தில் ஏறி இதைவிட வேறுநல்ல பழங்களை பறித்து தின்று பசியாற முடியாதநிலையில் இருந்தது.

அப் போது அந்த வழியே சென்ற வயதான குரங்கு ஒன்று அடேய் மடையாமுதலில் நன்றாக தரையில் அமர்ந்துகொண்டு அதன்பின் கையிலிருக்கும் பழத்தை பத்திரமாக கால்களால் பிடித்துகொண்டு வாயிலிருக்கும் பழத்தை கைகளால் பிடித்து நன்றாக பசியாற உண்டபின் கால்களில் பிடித்து வைத்துள்ள பழத்தை கைகளால் எடுத்து தேவையெனில் தின்றுபார் கையில் வெண்ணெய் வைத்து கொண்டு நெய் அலைந்தது போன்று பேராசையால் பசியில் பட்டினியோடு சாகாதே என அறிவுரை கூறிசென்றது அதன்பின் அக்குரங்கும் அவ்வாறே செய்து தம்முடைய பசியாற்றியபின் முந்தைய நிலையை பின்பற்றி மகிழ்ச்சியோடு வாழ்ந்துவர ஆரம்பித்தது

இந்த குரங்கு போன்றே நம்மில் பலர் பேராசையினால் கையிலிருக்கும் பொருளை சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை என அதனை வைத்து அனுபவிக்க தெரியாமல் அல்லல் பட்டு தானும் அனுபவிக்கமால் மற்றவர்களுக்கு கொடுப்பதற்கும் மனம் வராமல் வீணாக்கி மற்றவர்கள் இந்த தவறை சுட்டி காட்டினால் மட்டுமே நமக்கு அதனை பற்றிய அறிவு ஏற்படும் என்ற சூழலில் நாம் தற்போது இருந்து வருகின்றோம் என்பதே உண்மை நிலையாகும்

1 கருத்து:

வெங்கட் நாகராஜ் சொன்னது…

இன்றைய வலைச்சரத்தில் உங்கள் வலைப்பூவையும் தொடுத்திருக்கிறேன். காண வாரீர்......

http://blogintamil.blogspot.in/2014/11/blog-post_16.html

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...